Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

.தி.மு.. சார்பில், சென்னை தியாகராயநகர் பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, .தி.மு.. தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி பி.மணிமாறன் தலைமை தாங்கினார்.

.தி.மு.. பொதுசெயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆகியோர் கலந்து ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

விழா மேடை அருகே தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள். மேடையில் துப்பாக்கியை நிறுத்தி அதன் மீது ஹெல்மட் மாட்டப்பட்டிருந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்டு .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்

’’ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நான் கோவில் நிர்வாகத்தை குறைசொல்லவில்லை. அவரை அழைத்து இப்படி செய்ததற்கு மன்மோகன் சிங் அரசைத்தான் நான் குற்றம் சொல்வேன். எத்தனை கோவில்களை இடித்தவன் ராஜபக்சே?

தமிழ் ஈழ மக்கள் உரிமை போராட்டத்தை அழிக்க 5 ஆண்டுகளாக இந்திய அரசு ஆயுதம் வழங்கி வந்துள்ளது. இந்திய அரசின் இந்த துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது.

தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி இங்கு பேசக் கூடாது என்கிறார்கள். தடை செய்யப்பட்ட நாடுகளில் எல்லாம் பிரபாகரனின் படம் வைக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் பற்றி கூட்டம் நடத்த அனுமதி உள்ளது. ஈழத்தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுத்தரும் பொறுப்பு இங்குள்ள தமிழர்களுக்கும் உண்டு.

இலங்கை போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வீசியதே விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு காரணம். இதில் எத்தனை மாவீரர்கள் மறைந்து போய், உன்னத நோக்கத்திற்காக உயிர் கொடுத்தனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.

தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்து செல்ல பிரபாகரன் வருவார். தமிழீழம் நிச்சயம் மலரும். போரை முன்னெடுத்து செல்லும் பிரபாகரனுக்கு தோள் கொடுக்க நாங்கள் தயார்’’என்று பேசினார்.

0 Responses to பிரபாகரனுக்கு தோள் கொடுக்க நாங்கள் தயார்: வைகோ பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com