மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது. மகிந்த ராஜபக்சவின் புகைப்படங்களையும் ஆதரவுச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடனும் கொழும்பு ஆமர்வீதியினூடாக சுமார் 200 இற்கும் அதிகமான ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த கையோடு மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பிரச்சார உத்திகளை நடைமுறைப்படுத்துவதாகவும், இதற்கு சகோதரர் பசில் ராஜபக்ச நேரடியாக களமிறங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தல் நேர்மையானதாக இருக்குமா என்ற கேள்வி சிங்கள மக்கள் மத்தியில் தற்போது இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.



0 Responses to பசில் ராஜபக்சவின் நேரடி பார்வையில் தேர்தல் பிரச்சார உத்திகள்