Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலையில் பெய்துள்ள தொடர் மழையினால் முகாம்களில் உள்ள 2540 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்காப் படையினரின் போர் நடவடிக்கை காரணமாக திருகோணமலையின் மூதூர் பிரதேச செயாலாளர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மூன்று ஆண்டுகள் கடந்துதோடியுள்ள நிலையிலும், ஸ்ரீலங்கா அரசு இம்மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யவில்லை. இம்மகள் தொடராக முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.

தற்போது பெய்துள்ள மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிளிவெட்டி முகாமில் 1565 பேரும் பட்டித்திடல் முகாமில் 725 பேரும் மணற்சேனை முகாமில் 250 பேரும் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கி வாழ்கின்றார்கள்.

இம்மக்கள் மூதூர் கிழக்கு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார். மூதூர் கிழக்கு பிரதேசம் ஸ்ரீலங்காப் படையினரால் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்துள்ளார்கள். மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்லமுடியாத அளவிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தொடர் மழையினால் திருகோணமலை முகாம்களில் உள்ள 2540 மக்கள் பாதிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com