Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

இலங்கை அதிபர் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர்.

சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும்.

என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடியேற்றத்துறை அவருக்குத் தெரிவிக்கவில்லை.

இலங்கை அதிபர் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறவதில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், வெற்றி பெருவதற்கு தமிழர்களின் வாக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தனி வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பது தேர்தலில் விழும் தமிழர்களின் வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதுமட்டுமின்றி, தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டணியின் வாயிலாக தமிழர்களின் வாக்குகளை அதிபர் ராஜபக்சவுக்கு சாதிகமாக திருப்புவதில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த திட்டத்திற்கு எதிராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பதாலும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் அவர் கலந்துகொள்வது அவருக்கு ஆதரவாக தமிழர்களின் வாக்குகளை ஒன்று சேர்க்கும் என்று கருதப்பட்டதாலும் அவரை மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெப் உலகம்

0 Responses to ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வந்த சிவாஜிலிங்கம் நாடு கடத்தப்பட்டார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com