Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விமானப்படைக்குச் சொந்தமான எம். 24ரக ஹெலிக்கொப்டர் பயிற்சிக்குச் சென்றபோது விபத்தாக வில்லை எனவும் ஜனாதிபதியின் நிகழ்வு ஒன்றைப் பதிவுசெய்யச் சென்ற போதே விபத்து இடம்பெற்றதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மூத்த அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதியின் நிகழ்வொன்றைப் ஒளிப்பதிவுசெய்யச் சென்றபோது கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்கு உள்ளான ஹெலிக் கொப்டர் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களை அரசு மூடி மறைத்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக விளக்கமளித்த அவர், குறித்த ஹெலியில் முன்னதாகவே தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாகவும் ஆனாலும் இது தொடர்பாகக் கவனம் செலுத்தப் படவில்லை எனவும் சென்னார். ஹெலி பயிற்சியின்போதே விபத்துக்கு உள்ளானதாகப் பாதுகாப்பு அமைச்சினால் திரிபுபடுத்தப்பட்டு ஊடகங்களுக்கு செய்தி வழங்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதியின் நிகழ்வு ஒன்றுக்காகச் சென்றபோது இடம்பெற்ற விபத்து என ஏன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை எனவும், கேள்வி எழுப்பிய அகிலவிராஜ் காரியவசம், அந்த ஹெலியில் பயணம் செய்து உயிரிழந்த நான்கு பேர் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை எனவும் கண்டித்தார்
மொனராகல புத்தல பிரதேசத்தில் இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஹெலி விபத்து பயிற்சியின்போது நடைபெறவில்லை; ஜனாதிபதியின் நிகழ்வுக்கு சென்றபோதே விழுந்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com