Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜிஎஸ்பி வரிச்சலுகையை நீடிக்காவிட்டால் ஐரோப்பிய ஒன்றியம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்காவிட்டால் அது மனித உரிமை மீறலான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கவில்லையெனவும் சிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரிச்சலுகையயை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் தற்போது இவ்வாறு 7100 பொருட்களுக்கு அச்சலுகை வழங்கப்பட்டுவருவதாகவும் அதனை தொடர்ந்து வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர்ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார செயலர் பெனிற்றோ பெறோறோ சிறிலங்காவில் நாம் மேற்கொண்டுவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பயனற்ற ஒருவிடயம் என்றும் அதனனை நிறுத்துமாறும் பல தடவைகள் எச்சரித்திருந்தார். இப்போரை எப்போதுமே முடிவுக்கு கொண்டுவர முடியாதென்றும் தெரிவித்திருந்தார். அவ்வாறு போரை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் எம்மிடமுள்ள பலமான ஆயுதத்தை (வரிச்சலுகையை நிறுத்துதல்) பிரயோகிக்க தயங்கமாட்டோம் எனவும் கூறியிருந்தார்”.

இப்போது விடுதலைப் புலிகளை தோற்கடித்துவிட்டோம். ஆனால் மேற்குலகம் எம்மை பழிவாங்க முயற்சிக்கிறதுஎனவும் ஜிஎல். பீரிஸ் தனது கருத்தை வெளியிட்டார்.

0 Responses to ஜிஎஸ்பி வரிச்சலுகை வழங்காவிட்டால் ஐரோப்பிய ஒன்றியம் மீது சட்ட நடவடிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com