Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின்பேரில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று சரத் பொன்சேகா கூறியதாக தான் எழுதிய செய்தியில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் வழங்கிய செவ்வியை தான் திரிபுபடுத்தவில்லை என்றும் தன்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது என்றும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேற்படி கருத்தை பொன்சேகா கூறவில்லை என்றும் கூறினார் என்று செய்தி வெளியிட்ட சண்டே லீடருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பொன்சேகா தரப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் வேளையில், இது குறித்து குறிப்பிட்ட செய்தியை எழுதிய சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்க ஜேன்ஸிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-

போரின் கடைசி இரண்டு நாட்களில் என்ன நடைபெற்றது. விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிலர் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் நடேசன், புலித்தேவன் ஆகியோர் நோர்வே தரப்பினர் மற்றும் பாலித்த கோகன்ன ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை பாலித்த கோகன்னவும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அப்படியானால் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று பொன்சேகாவிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் பதிலளிக்கையில் -

நோர்வேயோ மூன்றாம் தரப்பு ஒன்று பசில் ராஜபக்சவை தொடர்புகொண்டுள்ளார்கள். பசில் ராஜபக்ச பின்னர் கோத்தபாய ராஜபக்சவை தொடர்புகொண்டுள்ளார். கோத்தபாய ராஜபக்ச போரிலே நின்றுகொண்டிருந்த தளபதி சவீந்திர டி சிலவாவை தொடர்புகொண்டு விடயத்தை கூறியுள்ளார். அத்துடன் சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்றும் சவீந்திர டி சில்வாவிடம் கோத்தபாய தெரிவித்துள்ளார் - என்று கூறினார்.

இதன்போது, இந்த விடயம் எவ்வாறு உங்களுக்கு தெரியும் என்று நான் பொன்கோவை கேட்டேன். ஏனைனில் இந்த விடயம் சம்பந்தமாக தன்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்று அவர் முன்னர் கூறியிருந்தார். அதற்கு -

சவீந்திர டி சில்வாவுடன் ஊடகவியளார் ஒருவர் களத்திலே நின்றிருந்தார். போர் முடிவுற்று இரண்டு நாட்களின் பின்னர், அந்த ஊடகவியளர் கூறியே தனக்கு நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட விடயம் தெரியும் என்றும் சவீந்திர டி சில்வா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவிடமிருந்து வந்த அழைப்பொன்றின்போது இது விடயமாக பேசினார் என்றும் அந்த ஊடகவியலாளர் தனக்கு கூறியதாகவும் பொன்சேகா தெரிவித்தார்.

இந்த விடய்ஙகளை வைத்து சம்பவம் நடைபெற்ற பின்னணியை நான் தெளிவாக செய்தியாக வெளியிட்டுள்ளேனே தவிர, பொன்சேகா கூறிய கருத்தை எந்த இடத்திலும் திரிபுபடுத்தவோ பிழையாக வெளியிடவோ இல்லை. இந்த செய்தி வெளியான பின்னர் கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்திப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பொன்சேகா என்னை சந்தித்தார். அப்போது, நான் அவரது கருத்தை எந்த இடத்திலும் திரிபுபடுத்தவில்லை என்றும் அந்த செய்தியை தான் மறுக்கப்போவதில்லை என்றும் கூறினார். அத்துடன் தான் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் இந்த விடயம் தற்போது அரசியல் விவகாரமும் மாறியிருப்பதால், அது குறித்து சிறு விளக்கம் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.

அதன்படி, கோத்தபாயவின் அழைப்பு சவீந்திர டி சில்வாவுக்கு கிடைத்த பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்கவேண்டிய தேவை உள்ளதாகவும் அப்போது நடைபெற்ற சம்பவங்கள் எவையாக இருந்தாலும் இராணுவ தளபதி என்ற வகையில் தானே முழுப்பொறுப்பு ஏற்பதாகவும் கூறினார்.

- என்று பிரட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்தார்.

0 Responses to பொன்சேகா குறித்த செய்தியில் எந்த பிழையும் இல்லை!: சண்டே லீடர் ஆசிரியர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com