Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்றைய தினம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு வருவதை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட அரசு ஒளிபரப்பு சேவைகள், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தேர்தல் திணைக்களத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வந்ததை ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்துள்ளன.

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக இன்று காலை 9.27 மணியளவில் தேர்தல் திணைக்களத்துக்கு சரத் பொன்சேகா சென்றிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த அரச ஊடகமான ரூபவாஹினியின் ஊடகவியலாளர்கள், அவரது வருகையை ஒளிப்பதிவு செய்யவோ அல்லது நேரடி ஒளிபரப்பில் ஒரு செய்தியாகவோகூட ஒளிபரப்பவில்லை.

சரத் பொன்சேகாவை தவிர இன்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களினதும் வருகை அரச ஊடகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தேர்தலின்போது அரச ஊடகம் பாரபட்சமின்றி செயற்படவேண்டும் என்று நேற்றைய தினம் தேர்தல் ஆணயைளருடன் நடைபெற்ற சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பொன்சேகா வேட்புமனுதாக்கலை இருட்டடிப்பு செய்த 'ரூபவாஹினி'!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com