Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் நிலவி வரும் ஆயுதப் பாவனைச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குக் குறைவான அதாவது 16 வயதுச் சிறுவன் கூட ரைஃபிள் துப்பாக்கி வைத்திருக்க முடியும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

நியூயோர்க் தவிர்ந்து கொலம்பியா மாவட்டம் உட்பட ஏனைய 22 மாநிலங்களும் மைனர்களுக்கு ஆயுதம் வைத்திருக்க அனுமதிப்பதில்லை. மேலும் 2013 இல் அமெரிக்காவின் சேண்டி ஹுக் இடைநிலைப் பள்ளியில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஃபுளோரிடா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலும் AR - Rifle துப்பாக்கி பயன்படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பேச்சாளர் ரிச்சர்ட் அஷ்ஷோப்பார்டி தெரிவித்த கருத்தில் சமீப காலமாக ஆயுதக் கொள்வனவில் கொண்டு வரப்பட்ட கடுமையான சட்டதிட்டங்கள் காரணமாக மனநலம் பாதிக்கப் பட்ட சுமார் 77 000 பொது மக்களின் கைக்கு துப்பாக்கி செல்வது தடுக்கப் பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

0 Responses to நியூயோர்க் மாநில ஆயுதச் சட்டப்படி 16 வயது சிறுவனுக்கும் ரைஃபிள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி! : அதிர்ச்சித் தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com