பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினால் கடந்த 12,13ம் திகதிகளில் பிரான்சு நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று முடிந்த கருத்துக்கணிப்பு வாக்களிப்பு தேர்தலில் 31,148 வாக்குகளை ( தபால் மூலமான வாக்குகள் இன்னும் கணக்கெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) மக்கள் அளித்து தழிழீழமே தமிழ்மக்களின் அபிலாசைகள் என்பதை சனநாயக வழித்தேர்தல் மூலம் தெரிவித்திருந்தனர்.
இதன் பொருட்டு இத்தேர்தல் சம்பந்தமான ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் AGECA மண்டபத்தில் CHARONNE ஏன்னும் இடத்தில் நடைபெற்றது. காலை குறித்த 9.30 மணிக்கு தமிழீழ தேசிய மாவீரர்களுக்கும், சிறீலங்கா, இந்திய இராணுவத்தாலும் இரண்டகர்களாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்களுக்குமான அமைதி வணக்கத்தோடு ஆரம்பமாகியது.
தமிழீழ மக்கள் பேரவையின் தோற்றம், தேவை பற்றியும், அதன் இதுவரைகாலமும் செய்துவந்த செயற்பாடுகள் பற்றியும் செயலாளர் செல்வி. ச.சாலினி அவர்கள் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு பிராந்திய ரீதியாக பொறுப்பாகவும், வாக்குசாவடிகளுக்கு பொறுப்பாகவும், உதவியவர்களின் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. பின்னர் முறையாக ஒவ்வொரு பிரதேச வாக்குசாவடிகள் பெற்ற வாக்குகளின் பதிவுகள், பங்கு கொண்ட மக்கள் பற்றிய விபரங்கள், கடமையாற்றிய பிரெஞ்சு உத்தியோக்த்தர்கள் படங்கள் விபரமாக வெண்திரையில் காட்டப்பட்டது.
பேரவையில் புதிதாக இணைந்து கொண்ட இளையவர்களும், தேர்தலில் கடமையாற்றியவர்களும், இந்த மக்களின் வாக்களிப்புன் உடாக பல செய்திகள் சர்வதேசத்திற்கு சொல்லப்பட்டுள்ளது என்பதையும் அதில் ஒன்றாக இளையவர்களாகிய எம்மிடம் ஒரு வரலாற்று பொறுப்பையும் கடமையையும் தரப்பட்டிருக்கின்றது என்றும் அதற்காக பாடுபடுவோம் என்றும் உறுதி மொழி கூறியிருந்தனர்.
பெரியவர்கள் இத் தேர்தல் மூலம் தம் சந்தித்த சங்கடங்கள், சந்தோசங்கள், நெருக்கடிகளையும், தேர்தலுக்கு உறுதுணையாக நின்றவர்கள் காட்டிய வேகமும், தாகமும் எங்களை எல்லாம் கொஞ்சக்காலம் புத்துணர்ச்சியையும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். பேரவையின் தற்காலிக நிர்வாக உறுப்பினராக இளையவர்கள் தம்மால் முன்னெடுத்த, முன்னெடுக்கப்படவுள்ள விடயங்களை தெரிவித்திருந்தனர்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பரப்புரையாளர் அரசியல் விஞ்ஞான மாணவன் செல்வன் பொஸ்கோவும், தமிழீழ மக்களின் மீது இனப்படுகொலையை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து நீதிகேட்கும் அமைப்பின் பிரான்சு பொறுப்பாளரும் சட்டக்கல்லூரி மாணவியான செல்வி. கிறிஸ்தா அவர்களும் எதிர்காலத்தில் மிகவும் அவசரமாக செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அதற்காக உதவியையும், தமிழீழ மக்கள் பேரவையில் தம்மை இணைத்து அதனையொரு பலமிக்க தமிழ்மக்களின் தூதுவராலயம் போன்று உருவாக்க வேண்டும் எனக்கூறிக்கொண்டனர்.
மக்கள் தமது ஆணையை கொடுத்தது போன்று பொருளாதாரத்தில் நிறைவு காணவேண்டும் என்றும் பேரவையின் பொருளாளர் இதுரை தேர்தல், மற்றும் ஐரோப்பிய பாரளுமன்றத்திற் செய்யப்பட்ட பரப்புரைச்செலவுகள் யாவும் ஒவ்வொருவரின் தமது சொந்தப்பணத்தையே செலவழித்துள்ளார்கள் என்றும் தமிழ் தனவந்தர்கள் தமது உதவியை மனமுவந்தளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் எதிர்கால வேலைத்திடங்கள் முன்னெடுத்துச்செல்லப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழின உணர்வாளரும், பற்றாளரும், ஐரோப்பிய பாராளமன்றத்தேர்தலில் போட்டியிட்ட பேராசிரியர் மதிப்புக்குரிய யூலியா( சுகிர்தராஐ்) அவர்கள் தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இனிவரும் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் எமக்கு முக்கியம் வாய்ந்ததாகவும், நடைபெற்ற கருத்துக்கணிப்பு தேர்தல் மூலமாக இங்கு பல ஆயிரம் பேர் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது என்பதையும், ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் உரிமைகளில் வாக்களிக்கும் உரிமையென்பது மிகவும் முக்கிய வாய்ந்ததொன்றாகும் என்பதையும், வாக்களிக்கும் தகுதியை ஒருவர் பெறுவதற்கு குடியுரிமை கிடைத்தவுடன் முதலில் ஒருமுறை சென்று அதனுடைய அலுவலகத்தில் ( மாநகரசபையில்) பதிவு செய்தல் வேண்டும் அதன்பிற்பாடு தேர்தல் காலத்தில் அவர் வாக்களிக்கும் தகுதியை தொடர்ந்து பெறுகின்றார் என்பதையும் தெரிவித்ததோடு ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இந்நாட்டு குடியுரிமை கிடைத்திருந்தாலும் அவர்களின் வாக்குகள் எமக்கும், எமது இனத்திற்கும் நல்லது செய்கின்ற ஒரு காரணியாக எதிர்காலத்தில் அமையப்போகின்றது என்பதையும், இதற்கான பதிவுகளை இதுவரை பதிவு செய்யாதவர்கள் டிசெம்பர் மாதத்திற்கு முன்பாக பதிவு செய்து கொள்ள மக்களுக்கு உதவிடுமாறு வந்திருந்த பற்றாளர்களை பேரவையினர் கேட்டுக்கொண்டனர்.
இக் கருத்துக்கருத்துக்கணிப்பு தேர்தலுக்கு உழைத்த அனைத்து தமிழ்சங்கங்களும், கழகங்களும், மற்றும் தனியார் அமைப்புக்களும் எமது உயிரிலும் மேலான தமிழீழ மக்களும் இணைந்து மாவீரர் கனவை வெல்ல தொடர்ந்து உழைக்கவேண்டும் என்று தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் கூறியிருந்தார்.
எதிர்வரும் ஆண்டில் தமிழீழ மக்கள் பேரவையின் நிர்வாகம் சனநாய வழி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அது பற்றிய முழுமையான விபரங்கள் சனவரி முதற்பகுதியில் பேரவையினால் வெளியிடப்படும் என்பதையும், தமிழீழ மக்கள் பேரவை எந்த நிலையில், எந்த காரணத்திற்காக உருவாக்கம் கண்டது என்றும், இனி வரும் காலத்தில் எவ்வாறு செயற்படப்போகின்றது என்பதை அதன் பொறுப்பாளர் திரு.திருசோதி அவர்கள் தெரிவித்துடன் பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் தாயகம் மீதான உறுதியான நிலைப்பாட்டையும், தமிழீழ தனியரசே தங்களின் தாகம் என்பதை வாக்களித்து தெரிவித்த வரலாற்று பதிவிற்க்கு பெருந்தலைவனின் வழிகாட்டலும் மாவீரர்களின் தியாகமுமே வழிவகுத்தது என்பதனை நெஞ்சிலேந்தி அன்றைய ஒன்றுகூடல் மதியம் 13.00 மணிக்கு தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதிமொழியுடன் நிறைவு கண்டது.

0 Responses to தமிழீழ மக்கள் பேரவையினர் பிரான்சு தேர்தல் ஒன்று கூடல்