Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்ததமிழர்கள் ஆதரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்" - என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டுவருகிறது. புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் சிறிலங்காவுக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது சிறிலங்கா அரசுக்க புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம். இந்த கட்டமைப்புக்களை முற்றாக அழித்தொழிப்பதற்கு பத்து வருடங்களும் ஆகலாம். கடந்த மே மாதம் போர் முடிவடைந்த பின்னரும் நாம், எமது இலக்குகளை மாற்றி அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறோம் - என்றார்.

சிறிலங்கா அரசை .நா. விளக்கம் கோரியிருப்பது தொடர்பாக கருத்து கூறுகையில் -

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியிருப்பது தமக்கு வியப்பளிக்கிறது. மிகப்பாரதூரமான ஓரு விடயத்தை ஊடகவியலாளர் ஒருவரிடம் தான் அறிந்துகொண்டதாக அரசியல்வாதி ஒருவர் கூறினார் என்று தெரிவித்து அதனை ஆதாரமாக கொண்டு, ஐக்கிய நாடுகள் சபை எம்மிடம் விளக்கம் கோருகின்றது என்றால், இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு ஒன்றுமே இருக்கமுடியாது. உண்மையிலேயே .நா. இந்த செயல் எமக்கு மிகுந்த வியப்பை அளித்துள்ளது.

போர் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் கேள்விப்பட்ட சம்பவத்தை போர் முடிவடைந்து எட்டு மாதங்களின் பின்னர் பொன்சேகா வெளியிட்டிருக்கிறார் என்றால், இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை முதலில் உணரவேண்டும் - என்றார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to நாடு கடந்த தமிழீழஅரசை நிச்சயம் உடைப்போம்: ரோகித்த போகல்லாகம

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com