Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

8 வது ஹிந்தி மாநாடு நியூயோர் நகரில் கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாடிய பான் கீ மூன் அவர்கள் தனது மகள் ஒரு இந்தியரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் தாம் புது டெல்லியில் தூதுவராகப் பணியாற்றியபோது விஜய் நம்பியார் தனக்கு மேலதிகாரியாகக் கடைமையாற்றியதாகவும், விஜய் நம்பியாரை தனக்கு 1972 ஆண்டு முதல் தெரியும் எனவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த மாநாடு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் பான் கீ மூன் உரையாற்றியதில் பல திடுக்கிடும் தகவல்கள் மறைந்திருப்பது தமிழர்களுக்குத் தெரியவில்லை.

இவர்கள் கென்யாவில் வாழும் பல இலங்கைத் தமிழர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. கொரிய தூதரகத்தில் முதல் முதலாக ஒரு ராஜதந்திரியாக பான் கீ மூன் பதவி ஏற்றபோது, அவரது ஆசானாக விஜய் நம்பியார் விளங்கியிருக்கிறார். .நாவில் ஒரு பொறுப்பதிகாரியாக விஜய் நம்பியார் கடமையாற்றி இருந்ததும் அவருக்கு கீழ் பான் கீ மூன் கடமையாற்றியதும் நடை பெற்ற மாநாட்டிலிருந்து வெளியாகியுள்ள செய்திகள்.

இறுதிச் சமரில் விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முயற்சிக்கும் போது அதன் ஏற்பாட்டாளர்களாக திகழ்ந்த முக்கிய நபர் விஜய் நம்பியார் என்பது யாவரும் அறிந்ததே. சரணடைய வரும் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று தெரிந்துமே நம்பியார், அவர்களை வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின் படி தாமே யுத்த களத்திற்குச் சென்று சரணடைவதைப் பார்வையிட இருப்பதாகவும் இவர் சிலரிடம் கூறியிருக்கிறார். இவர் தொடர்பாக பல முறைப்பாடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், விஜய் நம்பியாரும், பான் கீ மூனும் பாலிய சிநேகிதர்கள் என்ற விடயம் தற்போது அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிலை தெரியாமல் பல தமிழ் அமைப்புக்கள் விஜய் நம்பியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பான் கீ மூனை கோரிவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இதுவரை எந்த விசாரணையும் விஜய் நம்பியாருக்கு எதிராக நடத்தப்படவில்லை என்பதற்கு தற்போது தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பான் கீ மூனும் ஒரு இந்தியாவின் செல்லப் பிராணியே என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்துடன் .நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் எவ்வளவு இதய சுத்தியுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகுவார் என்பது தற்போது மிகுந்த சந்தேகத்திற்கு இடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாநாட்டில் பான் கீ மூன் பல்லிளித்து பேசிய சில ஹிந்தி வார்த்தைகள் கீழே..

ஹிந்தி தோடா தோடா மாலும் ! அப்படி என்றால் எனக்கு ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் !

இதை விட நீண்ட வசனத்தையும் இவர் பேசிக்காட்டியிருக்கிறாராம் என்றால் பாருங்களேன் !

நன்றி: அதிர்வு

0 Responses to பான் கீ மூன் மகள் இந்தியரை திருமணம் முடித்திருக்கிறார்: மேலும் அதிர்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com