இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்காது விட்டால், அது ஐக்கிய நாடுகளின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த ஆட்சிக் காலத்தில் கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதன் பதவிக் காலம் கடந்த மாதம் நிறைவுக்கு வந்தது. இந்த நிலையில், அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி அறிக்கையின் சில பரிந்துரைகள்:
1. இறுதி மோதல்களின் இறுதிக்கட்டத்தில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர்கள் விவகாரத்துக்குத் தீர்வு காண, சிறப்பு மேல் நீதிமன்றம் மற்றும் உண்மை ஆணைக்குழு ஆகியவற்றை அமைத்து, இருவழி உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
2. குற்றவியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் சந்தேக நபர்களை சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளும் சந்தேக நபர்களை உண்மை ஆணைக்குழு முன் நிறுத்தி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய பொதுமன்னிப்பு வழங்க முடியும்.
3. குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் மீது, உள்ளூர் விசாரணையாளர்கள், உள்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் மூலம் முற்றிலும் உள்ளக விசாரணையே நடத்தப்பட வேண்டும்.
4. குற்றத்தை ஒப்புக் கொள்பவர்கள் எத்தகைய சூழலில், குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று உண்மை ஆணைக்குழு முன்பாக விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.

0 Responses to நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்காது விட்டால் ஐ.நா.வின் நேரடி தலையீடு ஏற்படும்: பரணகம ஆணைக்குழு