Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த கணவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டால்..

அவருக்கு கிடைத் திருக்கும் பதிலோ மனைவியின் மரணச் சான்றிதழ் ஆகும். வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் காய மடைந்து வவுனியா ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட தனது மனைவியை கண்டுபித்து தருமாறு கேட்ட கணவன் ரவிகரன் என்பவருக்கு இந்தக் கதி நேர்ந்துள்ளது.

யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் துரித விசாரணையை மேற்கொண்ட போது மனைவி இறந்து போனதாக தெரிவிக்கும் மருத்துவச் சான்றிதழ் கிடைத்திருக்கின்றது. இத்தகவலை யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி .ஜனகராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர்மேலும் தெரிவித்தவை வருமாறு:

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தனது மனைவி (நாகேஸ்வரி 34) காயமடைந்து வவுனியா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பதவியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தனது மனைவி தொடர்பான விவரங்களை கண்டறிந்து தருமாறும் கொக்குவில் மேற் கில் வசிக்கும் கந்தையா ரவிகரன் கடந்த நவம்பர் மாதம் முற்பகுதியில் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதையடுத்து யாழ்.மனித உரிமை ஆணைக்குழு , வவுனியா ஆஸ்பத்திரியின் மருத்துவ அத்தியட்சகரிடம் தொடர்பு கொண்டு விசாரணைகளை மேற்கொண் டது. இந்த விசாரணையின் பிரகாரம் நாகேஸ்வரி (வயது 34) என்பவர் வவுனியா வைத்தியாசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக பதவியா வைத்தியாசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பயனளிக்காது இறந்து போனதாகவும் குறிப்பிட்ட நாள் வரை சடலத்தை பொறுப் பேற்காததால் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் தரப்பட்டது.

இது தொடர்பான மருத்துவச் சான்றிதழ் முறைப்பாட்டாளர் கந்தையா ரவிகரன் என்பவருக்கு தாபால் மூலம் அனுப்பப்பட்ட போதும் உரிய முகவரியில் இல்லை என்று தபால் யாழ். அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. எனவே முறைப்பாட்டாளர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வருகை தந்து மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

0 Responses to மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு கேட்ட கணவருக்கு ..பதில் மரணச்சான்றிதழ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com