கருணாவின் நெருங்கிய நண்பியும் மட்டக்களப்பு அரசினர் தேசிய கலைக் கல்லூரியின் பரதநாட்டியத் துறை பகுதி நேர விரிவுரையாளருமாகிய செல்வி சகிலா சைமன்சிங்கோ அண்மையில் கனடாவிற்கு சென்றார். தற்போது அவர் அங்கு அரசியல் அகதியாக தஞ்சம் கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக அங்குள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் அவர் அழைக்கப்பட்டதாகவும், அவர் கனடா விசா பெறுவதற்கு கருணாவும் ஏனைய சில அரசியல்வாதிகளும் உதவியதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவிற்குச் சென்ற இவர் தனது பரதநாட்டிய நிகழ்ச்சி முடிந்தவுடன் இலங்கைக்கு செல்லாமல் கனடாவில் உள்ள தனது உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் அங்கு அரசியல் அகதியாக தஞ்சம் கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது அகதிக் கோரிக்கையில் செல்வி சகிலா சைமன் சிங்கோ தான் ஒரு சிங்களத் தந்தைக்கும் தமிழ் தாய்க்கும் பிறந்த ஒரு பெண்ணாக இருப்பதால் தனக்கு சிங்களவர்களாலும் தமிழர்களாலும் மட்டக்களப்பிலும் நிறையவே ஆபத்துக்கள் இருப்பதாகவும் கனடிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நடன விரிவுரையாளர் செல்வி சகிலா சைமன் சிங்கோ திருகோணைமலையை பிறப்பிடமாகக் கொண்டவர். இந்தியாவிற்குச் சென்று நடனத்துறையில் பட்டம் பெற்றவர். இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் அங்கு சென்ற கருணாவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், அந்த தொடர்பு இலங்கைக்கு மீண்டும் வந்தபின்னர் தொடர்ந்தாகவும் இதனால் கருணா தனது அரசியல் செல்வாக்கைப் பாவித்து சகிலாவிற்கு மட்டக்களப்பு அரசினர் தேசிய கலைக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளர் பதவியை பெற்றுக் கொடுத்ததாகவும் மட்டக்களப்பில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் சகிலாவை கனடாவிற்கு அழைக்க உதவிய பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் தற்போது அவரை நாடு கடத்தும்படி கனடிய குடிவரவு அமைச்சரிடம் கோரியுள்ளதாகவும், இதன் காரணமாக அவரது அகதிக் கோரிக்கையை கனடிய குடிவரவுத் திணைக்களம் நிச்சயமாக நிராகரித்து இலங்கைக்கு அவரை திருப்பி அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மட்டக்களப்புச் செய்திகள் கூறுகின்றன.

0 Responses to கருணா(ய்)வால் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மட்டு. நடன ஆசிரியை