Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்ந்தும் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கி, ஜெனரல் சரத் பொன்சேகாவை விமர்சித்துக்கொண்டிருந்தால், அரசதலைவர் தேர்தலில் மகிந்த வெற்றிபெறும் எண்ணத்தை கைவிட வேண்டியேற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சர்களுடன் இடம்பெற்ற இரகசிய பேச்சுக்களின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை "லங்காதீப" பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜெனரல் பொன்சேக்காவை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று மைத்திரிபால சிறிசேன அந்த பேச்சுக்களின்போது தெரிவித்தார்..

இது குறித்து அவர் அரசதலைவர் மகிந்தவுக்கும் அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து அரசதலைவர் மகிந்த எந்த அறிவுறுத்தலையும் கோத்தபாயவுக்கு தெரிவிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டும் முகமாக நேற்று கண்டியில் நடைபெற்ற பிரசாரக்கூட்டமொன்றில் பேசிய கோத்தபாய, தனது பேச்சின்போது சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கோத்தபாய வாயை மூடினால்தான் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து சிந்திக்கலாம்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com