
சரத்பொன்சேகா தான் அடைந்தவற்றைக் கொண்டு திருப்தி அடையத் தெரியாத மனிதன் என விமர்சித்துள்ள கோத்தபாய அவரின் அரசயல் பிரவேசமும் அதிக ஆசையால் ஆனது எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் சொந்த பாவனைக்கென 100 மில்லியன் பெறுமதியான காணி வழங்கபபட்டுள்ளபோதும் அவற்றைக் கொண்டு திருப்தி அடையத் தெரியாதவர் சரத்பொன்சேகா எனவும் குறை கூறியுள்ளார்.
ஆனால் இக்காணி வழங்கப்பட்ட விடயம் இதுவரை சிறீலங்காவின் அதிகாரிகளினால் உரியமுறையில் தெரியப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் சரத்தைத் தேர்தலில் இருந்து விலகும் படி கோரி வழங்கப்பட்ட இலஞ்சமாக இருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல்ப் பரபுரை மேடைகளில் சரத் மற்றும் மகிந்த கூட்டணி மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருவதுடன் பல இலஞ்ச ஊழல் விடயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளமையும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போர் பற்றிய மறைந்திருந்த செய்திகள் பல தெரிய வருவதும் சிங்கள தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 Responses to பதவி ஆசையினால் வந்த பொன்சோகவின் அரசியல் பிரவேசம்: கோத்தபாய