பதிந்தவர்:
தம்பியன்
02 December 2009
அரசியலில் நுழைவதாக முன்னாள் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி உத்தியோகபூர்வமாக அறிவித்த நாளிலிருந்து அவரைக் களங்கப்படுத்தும் விதமான பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சரத் கூறுகிறார்.
ஆனால் தாம் அந்த தம்மீதும்,
தமது குடும்பத்தினர் மீதும் சாட்டப்படும் இந்த குற்றச்சாட்டுக்களை நாட்டுக்காக எதிர்நோக்கத் தயாராகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாளாக நாளாக பிரச்சாரங்கள் மிக மோசமடைந்து வருவதாக அவர் கூறினார்.
தமிழ் மக்களுக்கு எதிராக இவர் அரசாங்கத்துடன் சேர்ந்து பல கொடுமைகளைப் புரிந்துவிட்டு இப்போது அரசு கூறுவது அனைத்தும் தமக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்கே என பிரச்சாரம் செய்கிறார்.
உண்மையில் நாட்டில் நடந்த கொடுமைகள்,
மோசடிகள் அனைத்திலும் அப்போது மஹிந்த ராஜபக்ஷவின் மதிப்புக்குரியவராக இருந்த சரத் பொன்சேகாவுக்கு பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to என்மீது சேறு பூச எத்தனிக்கும் பிரச்சாரங்களையும் சந்திக்க தயார் - பொன்சேகா