Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருச்செந்தூர் தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணனை ஆதரித்து ஆத்தூரில் பிரச்சாரத்தைத் துவக்கினார்.

பிரச்சாரத்தின் போது அவர், ’’மத்திய அரசு இலங்கையில் இன அழிப்பு போருக்கு பீரங்கி வழங்கி உதவியது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் பிறந்த மண் இது.

இந்த மண்ணின் மக்கள் திமுக கூட்டணியிலான மத்திய அரசிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். திமுகவினர் தற்போது தோல்வி பயத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கருணாநிதி அரசாங்கத்தில் செயல்பாடுகள் சரியில்லை. ஜனநாயகம் மாறி பனநாயகமாக இருந்து வருகிறது. இத்தொகுதியில் அமைச்சராக இருந்து செயல்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது சுயலாபத்திற்காக அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் சேர்ந்துள்ளார்.

இதனால் இத்தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கு நஷ்டம்? பொதுமக்களின் வரிப்பணம்தான் வீனாகிறது.

அராஜகத்தை மீறி அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். இடைத்தேர்தல் வெற்றியை பொதுமக்கள் அதிமுகவிற்கு அளித்தால் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மாற்றம் ஏற்படும். அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணன் நிச்சயம் வெற்றி பெறுவார்’’என்று பேசினார்.

0 Responses to இது முத்துக்குமரன் பிறந்த மண்: வைகோ பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com