Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நம்பிக்கை.. பாமினியின் வரிகள்

பதிந்தவர்: தம்பியன் 12 April 2010

தமிழன் என்ற அடை மொழியை அகற்ற
நாம் என்ன இறைவனிடம்
வரமா கேட்க முடியும்..

அதர்மத்தை அகற்ற
அஸ்திரம்தான் வழியென நாம்
கீதையில் கற்றதுண்டு..

நாம் வாழும் நரகத்தில் நமது இடம்
அகதியின் உறைவிடம்
அதை அஸ்தமனம் ஆக்க
ஆண்டவா எம்மை ஆளவிடு என
கடவுளை வேண்டினால் காரியம் ஆகாது

கடலாலே வந்த அந்த கயவர் கூட்டம்
எம் நிலத்தை களவாடி இட்ட
அந்த சிங்க கொடியை தறித்திட வேண்டும்

மீண்டும் தமிழ் தழைத்திட வேண்டும்
தமிழர் தலை நிமிர்ந்திட வேண்டும்
நம்பிக்கை..


விதியே கதியே என எண்ணி
உன் கதியை அவர் கையில் இட்டால்
சதியால் உன் நிலத்தை சூறயாடிடுவார்
சந்ததி வாழ ஒரு துண்டு
நிலத்தையும் தரமாட்டார்

சங்கத்தால் வழர்த்த மொழி பேச
சங்கடம் வரும் என்று மறக்கிறாய்
சொந்த முகவரி மறைக்க
முகவரி தேடி அலைகிறாய்

போதும் தமிழா போதும் நீ பட்ட துன்பம்
வாழ்கையில் வட்டம் உண்டேல்
அதில் தோல்விக்கே இடம் ஒன்று உண்டு

நம்பிக்கையுடன் தலை தலைதூக்கு
இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்து
வெற்றிகள் உனை வந்து சேரும்
தோல்விகள் தனியென மறையும்
நீயும் இப் பூமியில் வாழவே
தோற்றவனாய் சாவதற்கு அல்ல..

பாமினி

0 Responses to நம்பிக்கை.. பாமினியின் வரிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com