Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத் பொன்சேக்காவிற்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை வெறுப்பேற்றி செவ்விகளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அரச தலைவர் மகிந்த, ஊடகவியலாளர்களிடம் கோரியுள்ளார்.

கொழும்பு ஹில்டன் விடுதியில் கடந்த வாரம் ஊடகவியலாளர்களுடனான இரவு நேர விருந்துபசாரத்தில் கலந்துகொண்டபோதே மகிந்த இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெயரில் சுமார் 400 ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட இந்த இரவு நேர விருந்துபசாரத்தில், சரத் பொன்சேக்காவுடன் நெருங்கிய தொடர்புகொண்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 'லங்காதீப' என்ற சிங்கள பத்திரிகையில் கோதாபய ராஜபக்ஷ்வின் விசேட செவ்வி வெளியாகியிருந்தமை குறித்து கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கோரியுள்ளார்.

குறித்த விசேட செவ்வியினால் கோதாபயவிற்கும், அரசாங்கத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்களும், புலனாய்வுப் பிரிவினரும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொன்சேகாவுக்கு எதிராக கோத்தபாயவை சீண்டவேண்டாம் என்று ஊடகவியாளர்களிடம் மகிந்த வேண்டுகோள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com