Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் 632 ஏக்கரில் சிறீலங்கா அரசு தென்னை செய்கையினை மேற்கொள்ளவுள்ளது.

சிறீலங்கா அரசினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் விவசாய செய்கையினை மேற்கொள்ள 912 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் நெல் ஆராச்சி நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அகத்தி முறிப்பு குளம் புனரமைக்கப்படவுள்ளதாகவும், வடக்கு பகுதிகளில் தென்னங்கன்றுகளை நடுவதற்கு 302 மில்லியன்ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் பளை, மன்னார், முல்லைத்தீவு பிரதேசங்களில் புதிதாக தென்னங்கன்று நட ஏற்பாடகியுள்ளது என்றும், சிறீலங்காவின் தெங்கு அபிவிருத்திக்கு சொந்தமான பளை மற்றும் அளம்பில் பிரதேசங்களில் உள்ள 632 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் புதிதாக தெங்கு பயிரிடப்படவுள்ளதாகவும், இதற்காக இப்பகுதிகளில் 100 நாற்று மேடைகள் அமைக்கப்பட்டு பத்து இலட்சத்திற்கும் அதிகமான தென்னங்கன்றுகள் பெறப்பட்டு நடப்படும் என்றும் சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.

இவற்றை மேற்பார்வை செய்யவென சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னுமொரு சுயாதீனமான செய்தி தெரிவிக்கும் அதேவேளை, இப்படியான வருமானங்களை தென்னிலங்கை பயன் பெறும் நோக்கோடு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இவை தமிழர்களின் வளங்களை சுரண்டும் நடவடிக்கை என மேலும் தெரிவிக்கின்றது.

0 Responses to முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் தென்னை நடுகையில் சிறீலங்கா அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com