அரசின் மீது சர்வதேச நாடுகள் யுத்தக்குற்ற விசாரணைகள் நடத்துவதற்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் ஜெனரல் சரத் பொன்சேகா சர்வதேசத்துக்குப் பெற்றுக்கொடுத்து விட்டார் என்று ஜாதிக ஹெல உறுமய நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டியது. மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ரிசாந்த வர்ணகுலசூரிய இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
இவ்வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி இந்நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்ட நாளாகும். அன்றைய தினம்தான் எதிர்க்கட்சிகளின்பொது வேட்பாளர் சரத் பொன்சேகா எமது படையினரையும், யுத்த வெற்றியையும் காட்டிக்கொடுத்தார். யுத்தக் களத்தில் படையினரிடம் சரணடைய வந்த புலித் தலைவர்களைச் சுட்டுக்கொல்ல பாதுகாப்புச் செயலர் கோத்தபாய உத்தரவிட்டார் என்று பொன்சேகா 13 ஆம் திகதி "த சண்டே லீடர்" பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் வரலாற்றில் இலங்கைக்கு எதிராக என்றுமில்லாதவாறு பாரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கின்றது. இது பெரும் காட்டிக்கொடுப்பு. இக் கூற்று புலி ஆதரவாளர்களுக்கும், சர்வதேசத்திற்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கை அரசு மீது யுத்தக்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்த சர்வதேசத்துக்குப் பொன்சேகா அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொடுத்துவிட்டார். பெரும் யுத்த வீரரான பொன்சேகா இப்போது பெரும் தேசத்துரோகியாக மாறியுள்ளார். இந்த சரத் பொன்சேகாவால் ஒரு போதும் வெற்றி பெறமுடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்குப் பிறகு ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஜே.வி.பிக்கும் அரசியல் நடத்தவே இயலாமல் போய்விடும். என்றார்.

0 Responses to மாபெரும் யுத்த வீரர் தேசத்துரோகியானார்!: யஹல உறுமய