சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கோத்தபாயவின் உத்தரவுப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று சரத் பொன்சேகா கூறினார் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்டேலீடர் பத்திரிகையில் வெளியான பிரதான செய்தி குறித்து நாளை வெளியாகவுள்ள அந்த பத்திரிகையின் அடுத்த பதிப்பில் திருத்தங்களை வெளியிடாவிட்டால் அந்தப் பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய பொன்சேகா தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகிய தினத்திற்கு மறுதினம் பத்திரிகையின் உரிமையாளர் லால் விக்ரமதுங்க, அந்தச் செய்தியை வெளியிட்ட சண்டேலீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் ஆகியோரை தனது அலுவலத்திற்கு அழைத்துள்ள பொன்சேகா தாம் கூறாத விடயங்களை சண்டே லீடர் வெளியிட்டுள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பொன்சேக்காவின் இணை ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீரவும், அநுரகுமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தனர்.
வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு இராணுவத்தினரிடம் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் தலைவர்கள், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டதாக தான் ஒருபோதும் கூறவில்லையென்று கூறிய பொன்சேகா, மேஜர் ஜெனரல் சவீந்திர டி சில்வாவின் பெயரையும் தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தவில்லையெனக் கூறியுள்ளார்.
யுத்தத்தின் இறுதி இரண்டு தினங்களில் தனது அனுபவங்களை பத்திரிகை ஆசிரியர் தன்னிடம் கேட்டதாகவும், அந்த விடயங்களைத் தான் தெளிவுபடுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் "நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைக் கொலை செய்ய பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டாரா?" - என ஆசிரியர் தம்மிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ள பொன்சேகா, "தான் அதுகுறித்து எதனையும் அறியவில்லை" - எனவும் எனினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் அவ்வாறான விடயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தான் தெரிவித்த கருத்தை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதால் அதனைத் திருத்தி வெளியிடுமாறு பொன்சேக்கா லால் விக்ரமதுங்கவிடம் கேட்டுள்ளார்.
தனக்கு எதிராக வெளியான செய்தியை திருத்தி வெளியிடாவிட்டால், அடுத்த வாரம் சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பொன்சேகா தீர்மானித்துள்ளதாக பொது வேட்பாளரின் அலுவலகச் சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சண்டே லீடருக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போகிறாராம் பொன்சேகா!