அரசதலைவர் தேர்தல் இன்று மீண்டும் கூடி ஆராயவுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெரும்பாலும் இன்று தமது முடிவை அறிவிக்கும் என்று தெரியவருகிறது. இன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத் திற்குச் சமூகமளிக்குமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது எனவும் அறியமுடிகிறது.
அரசதலைவர் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித முடிவுகளையும் எடுக்காத நிலையில் அக்கட்சிக்குள் தற்போது நெருக்கடி நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுகின்றனர்.
அரசதலைவர் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்தை மீறி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசதலைவர் வேட்பாளர்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உட்படப் பல்வேறு விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவிருக்கின்றன எனவும் கூறப்படுகிறது.பெரும்பாலும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசதலைவர் தேர்தல் தொடர்பாகத் தனது இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது லண்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். லண்டனில் சில நாள்கள் தங்கியிருக்கும் அவர் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கே.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளார்.
அதேவேளை, இதற்கு முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் சந்திப்பொன்றை நடத்தினர் எனவும் அறியமுடிகிறது.

0 Responses to அரசதலைவர் தேர்தல் தொடர்பான முடிவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று அறிவிக்கும்!