ஸ்கொட்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் நாவற்குழியில் (1986) வீரச்சாவை தழுவிய குபேரன் மற்றும் கப்டன் எல்லாளன் ஆகியோரின் சகோதரி திருமதி நகுலேஸ்வரி ரஞ்சன் ஈகைசுடரினை ஏற்றிவைக்க தொடர்ந்து மக்களும் தேசப் புதல்வர்களுக்கு தீபம் ஏற்றினர்.
துயிலுமில்ல பாடல் ஒலி ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. எழுச்சி கானங்கள், கவிதைகள், நடங்கள் ஆகியன இடம்பெற்றது. அதனை அடுத்து தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் தீரன் அவர்கள் எழுச்சி உரையை தொடர்ந்து இயக்குனர் செந்தமிழ் சீமானின் எழுச்சி உரை திரையில் காண்பிக்கப்பட்டது. மாலை 9 மணிக்கு நிகழ்வு இனிதே முடிவுற்றது.

0 Responses to ஸ்கொட்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்