Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பான ஐந்து யோசனைகளை பரிசீலித்துவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடுத்த வாரம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், .பி.டி.பி. பத்மநாபா அணி, புளொட் ஆகியவை மகிந்த ராஜபக்சவுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மேல் மாகாண மக்கள் முன்னணி ஆகியவை சரத் பொன்சேகாவுக்கும் தமது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், அரச தலைவர் தேர்தல் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மத்தியில் ஐந்து வெவ்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அரச தலைவர் தேர்தலின் முக்கிய வேட்பாளர்களான மகிந்த மற்றும் சரத் பொன்சேகாவுடன் பேசி தமது நிபந்தனைகளை யார் ஏற்கிறார்களோ அவருக்கு ஆதரவளிப்பது என்று ஒரு தரப்பும் -

தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் ஒருவரை போட்டியிட வைப்பது நல்லது என்று இன்னொரு தரப்பும் -

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் வடக்கு - கிழக்கு வாக்காளர்களுக்கு அவர்களுக்குரிய தெரிவை அவர்கள் கையிலேயே ஒப்படைப்போம் என்று மறு தரப்பும் -

சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளுக்காக பன்னெடுங்காலமாக குரல்கொடுத்துவரும் - இம்முறை அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் - விக்ரமபாகு கருணாரட்ணவுக்கு ஆதரவு தெரிவிப்பது உகந்தது என்று இன்னும் சிலரும் -

இம்முறை தேர்தலையும் - 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றது போல - கூட்டமைப்பு புறக்கணிக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் இன்னொரு தரப்பினரும் - யோசனைகளை முன்மொழிந்துள்ளார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் என்ன முடிவை எடுப்பது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்துவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டம், எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் கலந்தாலோசித்து ஒரு முடிவை அறிவிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

0 Responses to அரச தலைவர் தேர்தல் தொடர்பான ஐந்து யோசனைகளை பரிசீலித்துவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com