Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் வசிப்பவர்கள் வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் எனவும் அவர்கள் சுதந்திரமாக தமது பணத்தை இலங்கையை விட்டு நகர்த்தவும் முடியும் எனவும் இலங்கை வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது யாவரும் அறிந்ததே. அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ஷவினர்களினால் முறைகேடாக பெற்றுக்கொண்ட பணம் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்க இலங்கை மத்திய வங்கி இதன் மூலம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருப்பதாக தெரியவருகிறது.

அதாவது தேர்தலில் வெற்றி தோல்வி சரிசமாகக் காணப்படுவதால், இலங்கையில் இருக்கும் பல கோடி ரூபா கறுப்புப் பணத்தை ராஜபக்ஷ குடும்பத்தினரும், அவர்கள் உறவினர்கள் மற்றும் தொழில் நண்பர்கள் அனைவரும் அப்புறப்படுத்த இருப்பதாக அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. மக்களிடம் கொள்ளையிட்டும், கோத்தபாயவினால் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டும் பெறப்பட்ட பல மில்லியன் ரூபாக்களை அப்புறப்படுத்தும் நோக்கிலேயே இலங்கை வங்கி மூலமாக இவ்வாறு ஒரு ஏற்பாடு நடந்து வருவதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஷவினர் மற்றும் அவர்களது வர்த்தக நண்பர்கள் மக்களிடம் கொள்ளையிட்ட பணத்தொகையை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாக முன்னர் நாட்டிலிருந்து வெளியில் எடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இதற்கெதிராக நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் தெரிவித்துள்ளார்.

நன்றி: அதிர்வு

0 Responses to கறுப்புப் பணத்தை வெளியேற்ற ராஜபக்ஷ புதிய திட்டம் அம்பலம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com