சாதாரணமாக ரி - 56 ரக துப்பாக்கியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு ஒரு லட்சத்த 30 ஆயிரம் ரூபா செலவிப்படுகிறது. எனினும், குறித்த துப்பாக்கியை கொள்வனவு செய்வதற்காக 3 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களில் 587 துப்பாக்கிகள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து அவை இரகசியமான முறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் துப்பாக்கிகளை இராணுவத்தினரிடம் வழங்கியபோது அவை விடுதலைப் புலிகளுடன் சண்டையிடக்கூடிய வலு கொண்டிருக்கவில்லை எனக் கூறி நிராகரித்துள்ளனர். இதனையடுத்து இராணுவத் தலைமையகம் மேற்கொண்ட விசாரணைகளில் இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கிகள் தரம் குறைந்தவை எனத் தெரியவந்துள்ளது.
துப்பாக்கியிலிருந்து தோட்டங்கள் வெளியேறும் ரவைக் கூடுகள் உடனடியாக வெப்பமடைதல், சில துப்பாக்கிகளில் வாயுவெளியேறுதல் உள்ளிட்ட பல குழறுபடிகள் காணப்பட்டதாகவும் இவை தரம்குறைந்த உலோகங்களினால் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தரகுப் பணத்தைப் பெற்று இறக்குமதி செய்த இந்தத் துப்பாக்கிகள் கடந்த காலங்களில் ஆயுதக் களஞ்சியங்களில் நிரப்பப்பட்டிருந்தன. இவை களுத்துறை, பூசா, மின்னேரிய போன்ற முகாம்களில் பயிற்சி பெறும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இவை பயிற்சிகளுக்குக் கூட பயன்படுத்த முடியாதவை என இராணுவ அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
0 Responses to கோத்தபாய மேற்கொண்ட துப்பாக்கி கொள்வனவில் பாரிய ஊழல்: இராணுவ தரப்பு