
நல்லூர் கந்தன் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்பட்டு யாது பயன்..
சேட் போடாது வேஷ்டி கட்டி நல்லூருக்கு சென்று யாழ். மக்கள் மனங்களை கவர முயல்வது ரணில் பாணி அரசியலாகும். இப்போது அதே பாணியில் சேட் அணியாமல் வேஷ்டி கட்டி சரத் பொன்சேகா, ரணில் சகிதம் யாழ் குடாநாடு சென்றுள்ளார். அவர் கத்தோலிக்க மத குருமார், புத்தபிக்குள் போன்றோரையும் சந்தித்துள்ளார்கள். இதில் மனோகணேசன், ஜே.வி.பி தலைவர் சோமவன்ச, ரணில் போன்றோர் பங்கேற்றனர்.
01. யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டோர் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும்.
02. நிரந்தரமாகக் காணாமல் போனோருக்கு நட்ட ஈடு வழங்கப்படும்.
03. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு அப்பகுதி விவசாயத்திற்கு வழங்கப்படும்.
04. வெளிநாடுகளில் இருந்து பணத்தை எடுத்த அரசு வன்னி அகதிகளுக்கு எதுவும் செய்யவில்லை.
05. இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றம் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
இவருடைய கருத்துக்களை பின்னோக்கிப் பார்ப்பது அவசியம்:
01. இதுவரை சிங்கள அரசால் அமைக்கப்பட்ட எந்த விசாரணைக் கமிஷனும் தீர்ப்பை வழங்கியதாகவோ அதற்குரியவர்கள் தண்டிக்கப்பட்டதாகவோ இல்லை. 1983 யூலை கலவரத்தின் சன்சோனிக்கமிஷன் கூட இன்றுவரை தமிழருக்கு ஒரு தீர்வை தரவில்லை. இந்நிலையில் விசாரணைக் குழு தென்னாசியாவில் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது. விசாரணைக் கமிஷனை சந்திக்க வேண்டிய முதல் நபர் சரத் பொன்சேகா என்பதால் விசாரணைக் கமிஷன் யர்ருக்கு மேல் என்பது சுவாரசியமான கேள்வியாகும்.
02. நட்டஈடு முன்னரும் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது. சிலர் நட்டஈடு பெறுவதும், பலர் பெறாமலே போவதும் வழமையாக உள்ளது. இதில் பெரும் ஊழல் நிலவுகிறது. வன்னி அகதிகளுக்கான பணமே சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
03. வடக்கு முழுவதுமே இராணுவ மயமாகக் கிடக்கிறது. இப்போதும் ஆங்காங்கு கிணறுகளில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் வாய் திறப்பது இப்போதும் ஆபத்தான செயலாகவே இருப்பதாகக் கூறுகிறார்கள்.
04. இலங்கையில் ஆட்சி மாற்றம் அவசியமானது என்பது சரத்தின் முக்கிய கருத்தாகும். நமது தமிழ் சம்மந்தரும் இதைத்தான் கூறுகிறார். ஆனால் இலங்கைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆட்சி மாற்றமும், ஆட்சியில் நீடிப்பும் உதவி செய்யவில்லை என்பது கடந்தகால வரலாறு.
தற்போது தொலைபேசி வழியாக தேர்தல் வாக்குகளை கேட்டு வரும் மகிந்த ராஜபக்ஷ எப்போது வேஷ்டியுடன் நல்லூர் வரப்போகிறார் என்பது தெரியவில்லை.
தை 26 ற்குப் பிறகு இலங்கைக்கு இரண்டு வழிகள் பிறக்கும். ஒன்று ஆபத்தான பாதாளம் அல்லது புதிய பாதை
இதில் எதுதைத் தேர்வது என்பது வெற்றி பெற்றவரின் முன் வரும் சவாலாக இருக்கும்..
நன்மை செய்தால் அவர் ஆட்சியில் தொடர முடியாது..
தீமைகளுக்கு துணை போனால் அரசியலில் வண்டியோட்டலாம்…
இதனால்தான் சிறீலங்காவில் இதுவரை ஆட்சிக்கு வந்த எவரும் நல்லது செய்ய முயலவில்லை…
கி.மு – கி.பி என்பதுபோல தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் என்று அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் அமையும்..
சரத் – மகிந்த இருவரில் யார்…
யாழ் போவோருக்கு நல்லூர் கந்தன்தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்.
நல்லூர் கந்தன் தேர்தல் பிரச்சார நிலையமாக இருப்பதால் பயன் இல்லை.
நன்றி: அலைகள்
0 Responses to நல்லூருக்கு போகும் ரணிலின் பாரம்பரியம் தொடர்கிறது