Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அக்கட்சியை ஐக்கிய தேசிய கட்சி இரகசிய பேச்சுக்களுக்கு அழைத்துள்ளது.

சந்திராந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு மகிந்தவுக்கான தமது ஆதரவை ஏற்னகவே அறிவித்துள்ளபோதும் கருணாவுடனான பிரச்சினை மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை அரசு வழங்காதமை ஆகியவை தொடர்பில் அரசுக்கும் சந்திரகாந்தன் குழுவினருக்கும் தொடர்ந்தும் முறுகல் நீடித்து வருவதாகவும் -

இந்நிலையில் வரவுள்ள அரசதலைவர் தேர்தலில் சந்திரகாந்தனின் கட்சி பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் பக்கம் தாவிய முன்னாள் .தொ.. பிரமுகர் அண்மையில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு பொன்சேகாவுக்கு ஆதவரளிக்கும் என்று தெரிவித்திருந்த கருத்தை முதலமைச்சர் சந்திரகாந்தனின் பேச்சாளர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அழைப்பை ஏற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு இரகசிய பேச்சுக்களுக்கு செல்லுமா என்பது குறித்த தகவல்கள் அக்கட்சியினால் இன்னமும் வெளியிடப்படவில்லை.

0 Responses to பிள்ளையானை இரகசிய பேச்சுக்கு அழைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com