Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபக்சேவிடமே தாம் அரசியல் கற்றுக் கொண்டதாக எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் தேர்தல் வருகிற 26ந் தேதி நடக்கிறது. ஆளும் கட்சி சார்பில் அதிபர் ராஜபக்சே, எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பொன்சேகா, 10 அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வெளியிட்டார்.

அப்போது பேசிய பொன்சேகா, இலங்கை அதிபர் ராஜபக்சேவிடமே தாம் அரசியல் கற்றுக் கொண்டதாக கூறினார். எனவே தாம், எதிர்வரும் தேர்தலில் வெற்றியீட்டினால் அந்தப் பெருமை ஜனாதிபதியைச் சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளை ஒழித்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதல் இந்த ஆட்சியாளர்களைப் பார்த்ததன் பின்னர் உதயமாகியதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.


0 Responses to ராஜபக்சேவிடமே அரசியல் கற்றேன்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com