Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெரும் மதிப்புக்குரிய தமிழீழத் தேசியத்தலைவரின் மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிறிலங்காவின் தடுப்பு முகாமில் மறைந்ததையிட்டு கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றது.

தமிழீழ விடுதலைப் பயணத்தை தலைமை தாங்க ஓரு சூரியத்தேவனைப் பெற்றெடுத்த அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு தனது இதய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. தேசியத்தலைவரின் இளமைக்கால தமிழ்பற்றுக்கும் இலக்கிய வேட்கைக்கும் இவரே ஆரம்ப கர்த்தாவாக இருந்திருக்கின்றார்.

இவரின் நேரிய வழியும் நேர்மையும் என்றும் சோர்வுறாத தன்மையும் தேசியத்தலைவரின் இலட்சியப் பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றது. தேசியத்தலைவரின் பெற்றோர் என்ற காரணத்துக்காக இவரும் இவரது துணைவியாரும் சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு பல ஆண்டுகளாக ஆளாகி வந்திருக்கின்றார்கள்.

கடந்த 7 மாதங்காக முதியவர்கள் என்றும் பாராமல் தேசியத்தலைவரின் பெற்றோராகவும் தமிழர்களாகவும் இருந்த காரணங்களுக்காக சிறிலங்கா அரசின் வதைமுகாமில் வெளித் தொடர்புகளுக்கோ, மருத்துவ வசதிகளுக்கோ அனுமதிக்கப்படவில்லை.

இதன் காரணமாக கடுமையான உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் இவரது மறைவுச் செய்தி குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இவரது பிரிவால் துயரால் வாடும் தேசியத்தலைவரின் தாயாருக்கும் அவரது உறவினர்களுக்கும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அத் துயரத்தில் கனடா இளையோர் அமைப்பும் பங்கெடுத்துக் கொள்கின்றது.

0 Responses to தேசியத் தலைவரின் தந்தையார் மறைந்ததையிட்டு கனடா இளையோர் அமைப்பினரின் இரங்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com