Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரக்வொண் டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில் ஈழத்து இளைஞன் விபீசன் பரமநாதன் அவர்களின் சாதனை.

உலகம் ஈழத்தமிழர்களை கைவிட்டாலும் ஈழத்தமிழர்களாகிய நாம் எங்கு வாழ்ந்தாலும் வாழ்கின்ற நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது அந்தவகையில் ரக்வொண்டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில்.

இணுவிலைச் சேர்ந்த பரமநாதன் தம்பதிகளின் புதல்வன் விபீசன் (வயது 16); அவர்களின் திறமை பாராட்டுக்குரியது. ரக்வொண் டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில்உலகக்கோப்பைக்கான(18வயதிற்குட்பட்டோருக்கான) ரக்வொண்டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில் டென்மார்க் நாட்டின் சார்பாக கலந்து கொள்ள இருக்கின்றார்.

இப்போட்டியானது பெப்ரவரி மாதம் 2010ம் ஆண்டு மெக்சிக்கோவில் நடைபெறவுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து அதே நாட்டில் இளையோருக்கான ஒலிம்பிக் போட்டிக்காக நடைபெறும் தகுதிகான் போட்டியிலும் கலந்து கொள்கின்றார்.விபீசன் ரக்வோண்டோ தற்காப்புக்கலையினை தனது 5 வயதிலிருந்து பயின்று வருகின்றார்.

தனது 10 வது வயதில் கறுப்புப் பட்டியினைப் பெற்று டென்மார்க் நாட்டில் மிகவும் குறைந்த வயதில் கறுப்புப் பட்டியினைப் பெற்ற சாதனையாளராகவும் விளங்குகிறார். இதுவரை டென்மார்க்கிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டதோடு பல வெற்றிப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

இதுவரை 4 முறை டென்மார்க் சம்பியன் - 2 முறை நோர்டிக் சம்பியன் - 4 முறை ஸ்கன்டினேவியன் சம்பியனாகவும் வந்துள்ளார். இவர் டென்மார்க்கிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டதன் மூலம் 35 தடவைகள் முதலாம் இடத்தைப் பெற்றமை பாராட்டிற்குரியது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஐரோப்பா நாடுகளுக்கிடையிலான போட்டிகளில் இரண்டுமுறை டென்மார்க் நாட்டின் சார்பாகக் கலந்து கொண்டார். தனது முதலாவது போட்டிக்காக சோவியத்யூனியனிலிருந்து பிரிந்த அயபயான் எனும் நாட்டிற்கு சென்றுவந்தார்.

2009ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டில் நடைபெற்ற ஐரோப்பா நாடுகளுக்கிடையிலான போட்டியில் டென்மார்க் நாட்டின் சார்பாகக் கலந்து கொண்டதோடு மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

தனது வெற்றியால் களிப்புற்று தமிழீழக் கொடியுடன் மக்கள் முன் நின்றமை பெருமைக்குரியதாகும். விபீசன் மெக்சிக்கோவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று தான் வாழும் நாட்டிற்கும் தமிழீழத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.



0 Responses to டென்மார்க்கில் ஈழத்து இளைஞன் சாதனை (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com