சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் என்று பொன்சேகா தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கரணகொட கூறியுள்ளதாவது:-
யூகோஸ்லாவியா என்ற தனிநாடு பொஸ்னியா, சேர்பியா என்ற மாநிலங்கள் உட்பட ஆறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. பொஸ்னியாவுக்கும் சேர்பியாவுக்கும் இடையில் சண்டை மூண்டது. அங்கு அமைதிநிலையை காப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை சென்றது. அங்கு நீதியையும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இறுதியில், இருநாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின்போது இடம்பெற்ற சம்பவங்களுக்காக சேர்பிய பொஸ்னிய தலைவர்களான ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் றடோவன் கராஸிக் ஆகியோர் சர்வதேச குற்றவிசாரணைகள் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள். சேர்பியாவின் அரசதலைவர் மிலோசவின் சிறையில் உயிரிழந்தார். அந்நாட்டின் இராணுவ தளபதி தலைமறைவானார்.
இதுபோன்ற சம்பவம் சிறிலங்காவிலும் இடம்பெறக்கூடும். சிறிலங்கா படையினர் வெளிநாடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்படலாம். வெளிநாட்டு பயிற்சிகளுக்கு வெளிநாடுகள் அழைப்புவிடுக்காமல் போகலாம். ஐ.நா.வின் அமைதிப்பணிக்கு சிறிலங்கா படையினர் அழைக்கப்பட்டுவரும் நடைமுறை தடைப்படலாம்.
இவை எல்லாமே சரத் பொன்சேகா என்பவர் மேற்கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ளது. இதைவிட ஒருவர் நாட்டுக்கு செய்த துரோகம் என்ற எதை சொல்லவேண்டும்?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to யூகோஸ்லாவியாவில் இடம்பெற்ற சம்பவங்கள் போல் இலங்கையிலும் இடம்பெறலாம்: முன்னாள் கடற்படை தளபதி