Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூரிய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஆசியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று அரசியலில் இறங்கப்போவதாக தெரிவித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்டு தனது ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளார் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அம்பலாங்கொடயில் நேற்று நடைபெற்ற அரசதலைவர் மகிந்தவின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது தேர்தல் மேடையில் பிரசன்னமாகியிருந்த ஜெயசூரிய, எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் மகிந்தவுக்கான ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் கிரிக்கெட் வரலாற்றில் தேசிய அணிக்கு விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் அரசியலில் இவ்வாறு ஆர்வம் காண்பிப்பது இதுவே முதல் தடவை என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசதலைவர் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச தனது தந்தைக்கு ஆதரவாக மேற்கொண்டுவரும் தேர்தல் பிரசார விளம்பரத்தில் ஏற்கனவே தோன்றியுள்ள சனத் ஜெயசூரிய, அரசியலில் தனக்குள்ள விருபத்தை தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to அடுத்த வருடம் ஓய்வுபெறும் சனத் ஜெயசூரிய அரசியலில் குதிக்கிறார்! மகிந்தவுக்கு ஆதரவாக தேர்தல் மேடையில்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com