Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பக்.ஷவே...துர் பக்...ஷவே...!!!
படு பாதக செயல் புரிந்தவனே....!!

பச்சிளம் பாலகர்களை,
பள்ளியில் மேனி சிதற
பலியெடுத்தாய்...!! - உயிர்
பிரிந்த தாயவளின் முலை பற்றி
பசியோடு புரண்டழுத,,,சிசுவின்
துன்பத்திற்கு வழி சமைத்தாய்..!!

பச்சைக் குழந்தையையும்,
பரிதவிக்க கொன்றொழித்தாய்! - இன்று
பச்சாபதம் காட்டி,,
பல் இளித்து யாசகம் கேட்கின்றாய்....!!

பச்சைத்தமிழை.....
படு கொச்சைத்தமிழாய் உச்சரித்து
பல விதமாய் கொல்கின்றாய்..!!
பஞ்சாய் பறந்து வந்து,
பக்கமதில் நிற்கின்றாய் பிரச்சாரத்திற்காய்..
பற்றி எரிந்து சாம்பலாகிடுவாய்...!!
பத்தி எரியும் எம் மூச்சுக்காற்று பட்டு...

நாசகார சதிகள் புரிந்து,,
பகல் வேஷமிட்டு...,
குள்ள நரி கூட்டமாய்...,,
குடும்பத்தோடு வந்து,,
குந்தியிருக்கின்றாய்...!! நாடாளுமன்றமதில்...

வளம் கொழிக்க வைத்து விட்டாய்..!! - உன்னை
வளப்படுத்தி,, அழகு பார்த்த,, உன் தேசமதை..
(அம்பாந்தோட்டையினை)

உச்சியில் ஏற்றி விட்டாய்..!!
உன் சுற்றங்களையும்,,
உற்றார்களையும்...

யாரை உயர்த்துவதற்கு,,
யாசிக்கின்றாய்...?? இன்னும்,, இன்னும்,,
நெடுங்காலம் நீடிக்காது...!!
கொடுங்கோலன் உன் ஆட்சி...!!!

நெற்றிப்பொட்டில் குறியாய்,
நீண்டு செல்கின்றது...
குள்ள நரிக்கூட்டத்தின்,,
குற்றப்பத்திரிகை.....!!!

வடக்கின் வசந்தம் என்று,
வயிறெரிய வைக்கின்றாய்...!!
வரப்போகும் தேர்தலுக்காய்..!!
வணங்கி,, தலை குனிகின்றாய்..!!
வந்து விழுமா....??
வணங்காத் தமிழனின்,,
வாக்குகள் உன் பெட்டிக்குள்...???

”தமிழீழத்திலிருந்து ஒரு தமிழிச்சி...”

0 Responses to வந்து விழுமா....?? வணங்காத் தமிழனின் வாக்குகள் உன் பெட்டிக்குள்...???

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com