எனினும் சிறுவன் வழங்கிய வாக்கு மூலத்தின்படி மேலும் இருவர் வானில் இவ்வாறு கடத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுவதாகவும் இதுதொடர்பில் காவல்துறையினர் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 2 குடும்பத்தவர்கள் கப்பம் பெறும் இலக்காக கடத்தப்பட்டு உள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். மகேஸ்வரன் என்பவரை 50 லட்சம் கப்பம் கோரியும், மகேந்திரன் என்பவரை 20 லட்சம் கப்பம் கோரியும் கடத்தப்பட்டு உள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதில் மகேஸ்வரன் வாகன திருத்தும் தொழிலக உரிமையாளர் எனவும் மகேந்திரன் மின்சார தொழில்நுட்பவியலாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to 13 வயது சிறுவன் அதிஸ்ரவசமாக கடத்தல்காரரிடம் இருந்து மீட்பு: யாழ்