Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாற்பதுஆயிரம் மக்களை குண்டுகள் வீசியும் உயிருடன் புதைத்தும் தனது இன வெறியில் பாதியை தீர்துகொண்டவன் சிங்களவன். மீதியை முள்கம்பிகளில் இருக்கும் மக்களை வைத்து தீர்த்துக்கொண்டு இருக்கிறான். முள்ளிவாய்க்காலுடன் முடிவடைந்தது ஈழப்போர் என்ற சிங்களவனின் பறைசாற்றலை மெல்ல மெல்ல உடைத்து வரும் ஈழ மக்களை மிகவும் கவலைகொள்ளவும் அதிர்ச்சி அடையவும் வைக்கிறது யாழ்நகரின் கலாச்சார சீரழிவு.

உலகம் முழுதும் தமிழீழ உணர்வுகள் பொங்கிஎழும் இத்தருணத்தில் யாழில் வசிக்கும் சில தமிழீழ தேசதுரோகிகள் துணைரானுவக்குழுக்களுடனும் இராணுவத்துடனும் இணைந்து தமது கைவரிசையை காட்டத்தொடங்கி இருகின்றனர். இதன்படி இவர்கள் யாழ் இளைஞர்களுக்கு ஆபாசப்பட குறுந்தகடுகளையும் போதை பொருட்களையும் இலவசமாக வழங்கிவருகின்றனர் இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இது மக்கள் மனதை மாற்றுவதற்காக ராணுவம் வழமையாக தமிழீழ மக்களிடம் கையாளும் ஒரு நடவடிக்கை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறன் 1999 மே மாதம் யாழ் சுன்னாகம் பேரூந்து நிலையத்தின் அருகே மாணவி ஒருவரின் கையை பிடித்து இழுத்து ஆபாசமாக நடந்துகொள்ள முயன்ற சிங்கள ராணுவத்தினர் மூவரை அருகே உள்ள அரசமரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்தனர் யாழ் மக்கள். இதன் மூலம் அவர்கள் தங்களின் கலாச்சார விழுமியங்களையும் தங்களின் விலைபோகாத மானத்தையும் நிரூபித்தனர். அதே போல இரண்டு கொலைகள் செய்து திருடிக்கொன்று சென்ற திருடர்களை மடக்கிபிடித்து யாழ் நாவலர் வீதியில் நையப்புடைத்து ராணுவத்திடம் ஒப்படைத்தனர். இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது அதன் போது யாழ் மக்கள் தங்களின் கடமைகளையும் கலாச்சார விழுமியங்களையும் மிகவும் உறுதியோடு பாதுகாத்து வந்தனர் என்பதில் எமக்கு சந்தேகம் எதுவும் இல்லை.

ஆனால் இன்று சில விஷமிகளின் செயலால் யாழ்நகர் கலாச்சார சீரழிவுக்கு உள்ளாகி இருப்பதை நாம் மறுத்துவிடமுடியாது . அண்மையில் வெளியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் யாழ் ராணுவத்துடன் யாழ் இளைஞர்கள் அணியும் பெண் இராணுவத்தினருடன் பெண்கள் அணியும் கிரிக்கட் விளையாடினார்கள் என்று இந்தப் போட்டி யாழ் பிரதான பாடசாலை மைதானத்தில் நடந்துள்ளது. செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் ! ஏன் விளையாடுவதுடன் நிறுத்தி கொண்டீர்கள் ராணுவத்துடன் சென்று அன்றைய தினத்தை சிறப்பித்துவிட்டு வரவேண்டியது தானே! எம் இனத்தையே சிதைத்தவனிடம் நீங்கள் செய்ய வேண்டிய செயல் இது தானா ? உங்களுக்கு வெக்கமாக இல்லையா ? செம்மணி முதல் முள்ளிவாய்க்கால் வரைக்கும் உங்கள் அக்கா தங்கையர்களை கெடுத்து புதைகுழி தோண்டி புதைத்தவனுடன் சென்று விளையாடப்போவதா ? நமக்காக குருதி சிந்தி போராடிய போராளிகளுக்கும் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கும் செய்யக்கூடிய நன்றிக்கடனா ! இது ? எண்ணிப்பாருங்கள் !

தெல்லிப்பளை யுனியன் கல்லூரி மற்றும் மகாஜனா கல்லூரி மாணவிகளில் சிலர் கல்லூரிக்கு செல்லும் போது ராணுவத்தினர் அவர்களை பார்த்து ஹாய் ! என்றுசொல்லி நையாண்டி செய்வதும் பதிலுக்கு ஒருசில மாணவிகள் ஹாய்! சொல்லுவதும் அவர்களை பார்த்து சிரித்து காதல் களியாட்டங்களில் ஈடுபடுவது எமக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது . இது தவிர மேலும் சில கல்லூரி மாணவிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இயல்பாகி போய்விட்டது . ஏன் யாழ்நகரில் தமிழ் ஆண்களே இல்லையா ? போயும் போயும் எங்கள் அக்கா தங்கைகளின் உறுப்புகளில் துப்பாக்கிகளை விட்டு உயிருடன் வைத்து சுட்டு விளையடியவனிடமா நீங்கள் உறவாட விரும்புவது . உணர்ச்சி நரம்பு அருந்துவிட்டதா உங்களுக்கு ? உங்களுக்கு மூளை இல்லையா ? வெறும் ஜந்துகளா நீங்கள் ? ராணுவத்தின் கைப்பொம்மைகளா நீங்கள்? போராளிகள் செய்த தியாகங்கள் நீங்கள் ராணுவத்துடன் உறவாட தானா ?

இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க யாழ் பஸ் நிலையத்திலும், ஆரியகுளம் சந்தியிலும் , இன்னும் சில இடங்களிலும் மாலை ஆறு மணியானதும் கூட்டம் கூடுகிறது ஏன் தெரியுமா ? அங்கே சிங்கள விலை மாதுக்கள் வந்து விடுவார்கள் அவர்களுடன் விலைபேசி அவர்களை ராணுவ முகாம்களுக்குள் சென்று காமக்களியாட்டங்களை அரகேற்றி கொள்ளத்தான். இவர்களுக்கு துணையாக சில யாழ் நபர்களும் இருக்கிறார்கள் என்பதே வெட்ககேடானது ! இதுதவிர சிங்களவனின் கடைகளை வளர்ப்பது ! அவனிடம் சோளம் வாங்குவது, பாம்பாட்டியிடம் அதிக பணத்தை கொடுத்து அந்த சிங்களவனை வளர்த்து விட்டு தமிழ் வியாபாரிகளை புறந்தள்ளி விடுவது போன்ற செயல்கள் எல்லாம் யாழ் நகரில் சில விசமிகளின் துணையால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது .

கொலைகளும் கொள்ளைகளும் என்றுமில்லாதவாறு மலிந்து கிடக்கிறது யாழ்நகரில். ஆட்கடத்தலும் கள்ளச்சாராயம் கைச்சுவதுமாக யாழ்நகர் சீர்கெட்டு போய்விட்டது. பெண்களின் இறுக்கமான உடைகளும் அவர்களின் கூத்துக்களும் யாராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை .

அன்பார்ந்த யாழ்மக்களே தாயாக விடுதலைக்காய் நாம் கொடுத்துகொண்டிருகிற விலைகள் உங்களுக்கு தெரியும். இத்தருணத்தில் யாழில் நடந்து வரும் சம்பவங்கள் எம்மை மிகவும் வருத்தமடைய செய்கின்றன. நீங்கள் தான் இந்த விஷகிருமிகளை இனம்கண்டு அவர்களை சமுதாயத்தின் மீது நிறுத்தி அவர்களையும் அவர்களின் செயல்களையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் . என்றுமே சிங்களவனுடன் நக்கி பிழைக்கிறவர்கள் நாங்கள் அல்ல என்பதை வழமை போல நீங்கள் நிருபிக்கவேண்டும். அதுமட்டுமில்லாது யாழ்நகரின் கலாச்சார விழுமியங்களையும் அதன் தடையங்களையும் காக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட தயாராகுங்கள் .

மேலும் தேசத்துரோகிகளும் அதற்கு துணை போகுபவர்களும் திருந்திக்கொள்ளுங்கள் இல்லையெனில் யாழ் மக்களாலும் அவர்தம் தமிழீழப் படைகளாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதையே உலகம் வாழ்தமிழர்கள் எதிர்பார்கின்றோம். நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எம் எதிரியே தீர்மானிக்கின்றான் எனும் தலைவரின் கொள்கையை நினைவில்வைத்து தாயகத்தை மீட்போம்.

மீனகம்.

1 Response to யாழ் மக்களே! என்ன நடக்கிறது!: யாழில் இருந்து குமரன்

  1. Eelathamizhargal eeramaana kaatrai swwasikkum varai ooya maatom.....
    Ithu verum vaarthai alla....
    Mullivaaikaalil mudangi kidakkum en sagothara sagotharigalin vaazhkai...
    Endrum nenjil neruppudan....
    oru tamizhachiyaaga...
    Po. Gladiya...

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com