விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் தாயார் தமிழகத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று மாலை 6 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வேலுகுபேந்திரன் தலைமையில் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போலீஸ் அனுமதியுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் நான்கு வழிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் துவங்கி கோசம் போட ஆரம்பித்ததும் போலீஸ் அனைத்து பேரையும் கைது செய்து வேனில் ஏற்றிவிட்டனர்.



0 Responses to விடுதலை சிறுத்தைகள் 50 பேர் கைது