Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலட்சியத்தை அடையும் பாதையில் தாயகமும் புலமும் சேர்ந்து பயணிப்போம் என்ற தலைப்பில் ஐரோப்பாவில் உள்ள சில போலிகளால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் கட்டமைப்புக்கள் என்ற பெயரில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் விளம்பரங்களில் சுவிஷ் தமிழர் பேரவையின் பெயர் இணைக்கப்பட்டமைக்கு சுவிஷ் தமிழர் பேரவையின் செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முதல் சுவிஷ் தமிழர் பேரவையின் தலைவரிடமோ அல்லது செயலாளரிடமோ அனுமதியோ சம்மதமோ பெறப்படவில்லை என்றும் ஐரோப்பாவில் உள்ள சில விஷமிகள் சுவிஷ் தமிழர் பேரவையின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவிஷ் தமிழர் பேரவையின் பெயரை துஷ்பிரயோகம் செய்த இச்செயலை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் கட்டமைப்புக்கள் என்ற பெயரில் ஒரு அமைப்பு புலம்பெயர்ந்த நாடுகள் தழுவிய வகையில் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக சுவிஷ் தமிழர் பேரவையின் பெயரை பயன்படுத்தியதற்காக சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

சுவிஷ் நாட்டில் உள்ள தமிழர் அமைப்புக்களை உள்ளடக்கிய சுவிஷ் தமிழர் பேரவை சுவிஷ் நாட்டில் உள்ள தமிழ் மக்களினதும் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களினதும் விரும்பங்கள் எண்ணங்களுக்கு அமைவாக செயற்படும் அமைப்பாகும். தமிழ் மக்களின் விரும்பங்கள் எண்ணங்களுக்கு மாறாக சுவிஷ் தமிழர் பேரவை ஒருபோதும் செயற்படமாட்டாது.

அவ்வாறு இருக்கும் போது சுயநலங்களுடன் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படுபவர்களை சுவிஷ் தமிழர் பேரவை ஒரு போதும் ஆதரிக்கப்போவதில்லை. தமிழ் மக்களை தவறாக வழி நடத்துவதற்கு சுவிஷ் தமிழர் பேரவை தயாராக இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் கட்டமைப்புக்கள் என்ற பெயரில் யாருடைய பெயரும் இன்றி அநாமதேயமான முறையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உண்மையான பெயர் விபரங்களுடன் அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

திரைமறைவில் ஒளித்திருந்து போலி அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்றுபவர்கள் விரைவில் மக்களின் தண்டனைக்கு உட்படுவார்கள் என்றும் நமசிவாயம் தெரிவித்துள்ளார்.

எமது பெயரை பயன்படுத்தி ஆதரவு தேட முற்படும் போலிகளின் முகத்திரைகளை தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்றும் இவர்களுக்கு தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் இந்த தேர்தல் மூலம் தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் சுவிஷ் தமிழர் பேரவையின் செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

த.நமசிவாயம்

பொதுச்செயலாளர்

சுவிஷ் தமிழர் பேரவை

0 Responses to தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சுவிஸ் தமிழர் பேரவை ஒருபோதும் ஆதரித்ததில்லை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com