பொன்சேகாவை அரசு விடுதலை செய்யும் வரை சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொள்வது என பெளத்த துறைவிகளின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவை அரசுவிடுதலை செய்யும் வரை சாகும் வரை உண்ணநிலைப் போராட்டத்தை மேற்கொள்வது என பெளத்த துறவிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஒரு தொகுதி பெளத்த துறவிகள் நேற்று அதற்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஜே.வி.பி யின் ஆதரவுடன் புறக்கோட்டைப் பகுதியில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளை அரசு கேட்கும் வரையில் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெளத்த துறவிகள் தெரிவித்துள்ளனர்.



0 Responses to பொன்சேகாவின் விடுதலையைக் கோரி பெளத்த துறவிகள் உண்ணாவிரதம்