தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பெருமளவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
நிகழ்வில் உரை நிகழத்திய சுரேஸ் பிறேமச்சந்திரன்,
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் பிரதிநித்துவத்தினைச் சிதைக்கவென பல்வேறு முனைப்புக்களில் பெருமளவானோர் தேர்தலில் இறக்கப்பட்ட போதிலும் எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைத் தேர்வு செய்து அனைத்து சதி முயற்சிகளையும் முறியடித்துள்ளனர்.
இனிவருங்காலங்களில் தமிழ் தேசியச் செயற்பாடுகளை மேம்படுத்தவும், தமிழ் தேசிய ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் கூட்டமைப்பின் வேலைத் திட்டங்களை மேம்பாட்டுடன் முன்னெடுக்கவுமென தமிழ் தேசிய மாநாடு மிகவிரைவில் முன்னெடுக்கப்படும்.
இந்த மாநாட்டினை அடுத்து தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் வீச்சுப்பெறும் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட பொ.ஐங்கரநேசனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.



0 Responses to தமிழ் தேசிய மாநாடு மிகவிரைவில்!