Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் தினம் பரீஸ் (75020) பனியோலை என்னும் இடத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகியது. இன் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இவ் பொதுச்சுடரினை மாவீரன் 2ம் லெப்ரினன் மத்தியஸ் இளந்தேவனின் சகோதரர் ஏற்றி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு, நாட்டுப்பற்றாளர் சக்காரி சந்திரகுமார் அவர்களின் தயார் ஈகைச்சுடரேற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.

மலர்வணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் அங்கையற்கண்ணி இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது. இவ் இசைக்குழுவிற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. அதனைத்தொடர்ந்து செவறோன் தமிழ்ச்சோலை மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பு உறுப்பினரின் உரைஇடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நொய்ஸ்லு கிறோன் தமிழ்ச்சோலை மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பரீஸ் 20 (குநஅஅந சுநடயளை ) பம் றோளை பொறுப்பாளர் உரை நிகழ்த்தினார். சார்சல் தமிழ்ச்சோலை மாணவிகளின் நடனம் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து செல்வி சாளினி அவர்கள் மக்கள் பேரவை தொடர்பாகவும், நாடுகடந்த அரசு தொடர்பாகவும் உரை நிகழ்த்தினார். பரீஸ் 13 தமிழ்ச்சோலை மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் கவிதை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து திரு +லியா மாஸ்ரர் அவர்கள் நாடுகடந்த அரசின் வாக்கெடுப்புப் பற்றி உரைநிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வில்லூபல் தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம் இடம்பெற்றது இத்துடன் இன் நிகழ்வு நம்புங்கள் தமிழீழம் என்னும் பாடல் இசைக்கப்பட்டு இனிதே நிறைவேறியது. இன் நிகழ்விற்கு நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.





0 Responses to தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் தினம்: பிரான்ஸ் (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com