Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

இதுகுறித்து இன்று பாராளுமன்றத்தில் பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்க அனுமதி அளித்துவிட்டு, பின்னர் மறுத்தது ஏன்? இதுபற்றி மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

மாநிலங்களவையிலும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, பாஜக உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் இப்பிரச்சனையை எழுப்பினர்.

எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத பார்வதி அம்மாளை விசா வழங்கிய பிறகு, விமானத்தில் இருந்து கூட இறங்க விடாமல் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். திருமதி பார்வதி அம்மாள் சென்னையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

0 Responses to தேசியத்தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பியது ஏன்? பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com