Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீரடி நீச்சல் எல்லாம் நாம் அறிவோம்
துயர் - நீந்திக்கரையேறும் வழியறிவோம்
யாரடிச்சாலும் திருப்பியடிப்போம்
தன்மான மீட்பிற்க்காய் உயிரை கொடுப்போம்..

நம்பியேமாறும் அண்ணன் அவன் மறுத்து விட்டான்
தன்னாட்டின் உரிமைதனை வன்னியிலே நடாத்திவிட்டான்
தாய் மண்ணை மீட்டெடுக்கும் தன்னாட்சியாய் மலர்வோம் என்று
ஈழத்தமிழா நீயும் எழுச்சி குரல் உறுமலடா..

மண்ணின் விடுதலையும் பெண்ணின் விடுதலையும்
கண்ணின் மணியாக நாம் கருதி வாழ்ந்திருந்தோம்
புண்ணில் வழிந்தோடும் ரத்தமாய் நெஞ்சம் சிதறி
அங்கே நித்தமும் சாக்காடு..

புலம் பெயர் வாழ் தமிழனின் தன்மான காற்று
தனதானிக்காற்றாக ஈழத்தை நிரப்பட்டும்
வெடிக்கட்டும் மக்கள் புரட்டிச்சியின் வேகாறுகள்
அன்னியக் கட்டுக்களை பொசுக்கி எரிக்கட்டும்
ஆழுமையும் ஆழுகையும் உந்தனுக்கு இல்லையென்றால்
வீடுமில்லை நாடுமில்லை தமிழனே நீயும் நம்பு..

ஈழத்தமிழனின் வாழும் தன்னாட்சி உரிமை தன்னை
மறுத்துரைக்கும் சிறப்புரிமை உலகின் எந்த
உருப்புரிமை நாடுகளுக்கும் கிடையவே கிடையாது
எம் இனத்தை இல்லாதொளிக்கும் இறுதி இலக்கில்
சிங்களம் வெற்றி பெறும் என்று நம்பும் இரட்டை நாக்கு
உலக நாடுகளின் நம்பிக்கைகளை நாம் தவிடு பொடியாக்காவிட்டால்
நாமும் நம் ஈழக்கொள்கைகளும் பின்னடைவிற்கு உள்ளாகும்...

நாளைய இருப்பிற்கான எம் இனத்தின் ஈழத்திற்கான
எம் கரங்களின் பலங்களின் அசைவிலேதான்
வாழ்வா சாவா என்ற எம் இனத்தின் இறுதி மூச்சு..
தமிழனே நீயும் பலமாகு தாயக கோட்பாடு உனதாகும்..
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..

பாமினி.

0 Responses to தமிழனே நீயும் பலமாகு.... பாமினியின் வரிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com