தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும் புலிகளினதும் கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை எனவே அரசாங்கம் ஒருபோதும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றக்கூடாது. தேர்தலில் வடக்கு கிழக்கில் வெற்றிபெற்று விடடதற்காக நாட்டை துண்டாடி தமிழீழம் அமைக்க இடமளிக்கமுடியாது நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் அரசுடன் இணைந்து செயற்படவேண்டும்.
கேட்பது கிடைக்காவிட்டால் தருவதை பெற்றுக்கொண்டு வாழப்பழக வேண்டும் எனவும் மேலும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அது புலிகளின் கோரிக்கையே. தமிழ் மக்களின் தேவை தமிழீழம் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் தேவை தமிழீழமே என்று கூறி நாட்டைத் துண்டாட முயற்சி செய்யக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



கேட்பது கிடைக்காவிட்டால் தருவதை பெற்று வாழுவதற்கு தமிழர்கள் ஒன்றும் காவி உடையில் குடும்பம் நடத்தவில்லை.தமிழர்களை சுதந்திரமாக வாழ விட்டால் சிங்கள மக்கள் கேட்காததையும் மனமுவர்ந்து கொடுப்பார்கள் தமிழர்கள்.