தற்போதைய சூழமைவில் தமிழ்ப் பிரிவினைவாதிகள் சிறிலங்காவிலிருந்து வெளியேறுவதற்கான எந்தத் தேவையும் இல்லை என்றும் அவர்கள் அவுஸ்ரேலிய மண்ணையும் 'கெடுக்கப் போகிறார்கள்' எனவும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம தெரிவிக்கிறார்.
'புகலிடம் கோரும் தமிழர்களை அவுஸ்ரேலியா தொடர்ந்தும் அனுமதிக்குமிடத்து அது பிரிவினைவாதம் மீண்டும் முளை விடுவதற்கான சூழமைவினை ஏற்படுத்திவிடும்' என்றார் அவர்.
'ஆதலினால், சிறிலங்காவில் தற்போது நிலவுகின்ற சூழமைவினைக் கருத்திற்கொண்டு புகலிடம் கோரும் தமிழர்களை அவுஸ்ரேலியாவிற்குள் அனுமதிக்கவேண்டாம் என நாம் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினைக் கோருகிறோம். தங்களது அரசியல் நோக்கங்களுக்காக அவுஸ்தேரலியாவில் புகலிடம் கோரும் தமிழர்களை அனுமதிப்பதன் ஊடாக அவுஸ்ரேலிய மண் கெடுக்கப்படுவதை நான் விரும்வில்லை' என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில் திரு.போகல்லாகம இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார்.



0 Responses to புலிகள் 'மீண்டும் உயிர்பெறுவதற்கான' அடித்தளத்தினை அவுஸ்ரேலியா வழங்குகிறதாம்: போகல்லாகம