Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடைபெற்று முடிந்த சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, .சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு தொடர்பிலான உத்தியோக பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளர் கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆணையாளரினால் முடிவுகள் அறிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்தர் சுரேஸ் பிறேமச்சந்திரன் பத்திரிகையாளர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஒத்துளைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுரேஷ் பிறேமச்சந்திரன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கிய கிளிநொச்சி மாவட்ட மக்கள் தேர்தலில் வாக்களிக்க முழுமையாக அனுமதிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர் இது குறித்து தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளரும் உதவித் தெரிவத்தாட்சி ஆணையாளரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் கூட சட்டவிரோமான செயற்பாடுகள் பலவும் இடம்பெற்றதாகத் தெரிவித்த அவர், தேர்தல் சட்டங்களுக்கு முரணான பல சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அவற்றைத் தடுக்க காவல்துறையினர் முயற்சிக்கவில்லை. அல்லது முயற்சிக்கப்பட்டு அது கைகூடவில்லை.

இவ்வாறான முறைகேடுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும் மக்கள் ஜனநாயக முறையிலான தேர்தலில் பங்களிக்க எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தத் தேர்தல் ஓரளவு சுமுகமாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள் என்றும் சுரேஸ் பிறேமசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஐவர் தெரிவு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com