Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் அண்மையில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றக்கொள்ளக் கூடியவையே ஜே.வி.பி அறிவித்துள்ளது.

குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா நடத்தப்படும் விதம் தொடர்பில் மில்லிபாண்ட் வெளியிட்ட கருத்துக்கள் மெத்தச் சரி என ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் அரசாங்கம் தடுத்து வைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இது ஓர் மனித உரிமை மீறல் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலளார் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் மற்றும் ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றை மனித உரிமை மீறல்களாகவே கருதப்பட வேண்டும் எனவும், டேவிடம் மில்லிபாண்டின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் டேவிட் மில்லிபாண்ட் வெளியிட்டுள்ள கருத்துக்களை தாம் இங்கு சுட்டிக்காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களின் அடிப்படையில் காணாமல் போதல் சம்பவங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைகள் அச்சுறுத்தல்கள் மற்றும் காணாமல்போதல் சம்பவங்கள் தற்போது இயல்பு வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றமடைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வீரர் ஒருவருக்கு அரசாங்கம் அளிக்கும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களுக்கு எவ்வாறான நிலை நேரும் என்பதனை மதிப்பிட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to டேவிட் மில்லிபாண்டின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக ஜே.வி.பி அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com